
6 மாதங்களில் 53 லட்சம் பாலியல் சுரண்டல் பதிவுகள் மீது நடவடிக்கை! மெட்டா
இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 53 லட்சம் பாலியல் சுரண்டல் பதிவுகள் அல்லது உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை...

மெட்டா - கோப்புப் படம்
இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 53 லட்சம் பாலியல் சுரண்டல் பதிவுகள் அல்லது உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
குழந்தைகளைச் சுரண்டும் வகையிலான மறைமுக விளம்பரங்களைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகவும் மெட்டா குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்டா தெரிவித்துள்ளதாவது:
இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் முகநூல், இன்ஸ்டாகிராம் தளங்களில் 53 லட்சம் பாலியல் சுரண்டல் பதிவுகள் அல்லது உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேகாலகட்டத்தில் உலகளவில் 3.32 கோடி உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் இதில் 97% உள்ளடக்கங்கள் மீது புகார்கள் எதுவும் அளிக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களை மறைமுகமாகத் தனது தளங்களுக்கு வெளியே உள்ள குழந்தைப் பாலியல் சீண்டல் தொடர்பான உள்ளடக்கங்களுக்கு வழிநடத்தக்கூடிய விளம்பரங்களைக் கண்டறிவதற்காக புதிய செய்யறிவு கருவிகளை மெட்டா வடிவமைத்துள்ளது.
குற்றவாளிகள் பிடிபடாமல் தப்பிப்பதற்காக விளம்பரங்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.
மேலும், பாதிப்பில்லாதவை போல் தோன்றும் விளம்பரங்கள் மூலம் பயனர்களை வெளி இணையதளங்களில் உள்ள சட்டவிரோத உள்ளடக்கத்திற்கு வழிநடத்துவதாகவும் கண்டறிந்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்யறிவு கருவிகள் மூலம், சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள கணக்குகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Summary
5.3 million child exploitation content pieces acted on in India; Meta deploys
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







