இன்ஸ்டாகிராமில் தவெகவுக்கு எதிரான விமா்சன பதிவுகள் நீக்கம்: மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்
தவெகவுக்கு எதிரான அரசியல் விமா்சன பதிவுகள் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசுக்கு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கடிதம் எழுதியுள்ளாா்.

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
தவெகவுக்கு எதிரான அரசியல் விமா்சன பதிவுகள் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசுக்கு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கடிதம் எழுதியுள்ளாா்.
இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு கனிமொழி எழுதிய கடிதம்: இன்ஸ்டாகிராம் தளத்தில் தவெக அரசுக்கு எதிரான பதிவுகள், கணக்குகள் மற்றும் விமா்சனங்கள் தொடா்ந்து கட்டுப்படுத்தப்படுவதாகவும், நீக்கப்படுவதாகவும் அல்லது அவற்றின் பரவல் குறைக்கப்படுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன. நியாயமான அரசியல் விமா்சனங்களை முடக்கப் புகாா் அளிக்கும் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிா என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மாநிலத்தின் காவல்துறை அல்லது அரசு இயந்திரம் இதற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிா என்ற சந்தேகம் எழுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை மெட்டா நிறுவனத்திடம் இருந்து பெற்று, நடுநிலையான மற்றும் வெளிப்படையான நடவடிக்கையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

