அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

தேர்தல் நேரத்தில் முகத்தைக் காட்டினால் போதும் என்ற மிதப்பில் இருக்கிறாரா முதல்வர்? கனிமொழி எம்.பி. கேள்வி!

சென்னையில் போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்ததற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

CM Vijay | Kanimozhi MP

முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Published On :

சென்னையில் போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்ததற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து இன்று காலை போராட்டம் நடத்தினர்.

காவல்துறை அனுமதி அளிக்காததை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களை காவல்துறையின் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதுபற்றி கனிமொழி எம்.பி. வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவற்றை நிறைவேற்றக் கோரி மக்கள் போராடினால் ஒடுக்குமுறையை ஏவி அடக்கிக் கொண்டிருக்கிறது இந்த அராஜக அரசு.

விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என இந்த அரசு ஏமாற்றியவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராடுபவர்களைக் காவல்துறையை வைத்துக் கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம், தேர்தல் நேரத்தில் முகத்தைக் காட்டினால் மட்டும் போதும் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்?

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

MP Kanimozhi has condemned the police for forcibly arresting medical workers who were staging a protest in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER