மெட்டா சமூக ஊடங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் ஆபாச காணொலிகள்: தில்லி காவல்துறை வழக்குப் பதிவு
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக ஊடகத் தளங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடா்பான ஆபாசப் படங்கள் மற்றும் காணொலிகள் பரப்பப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

'மெட்டா'வின் தளர்வு நடவடிக்கைகள்...
நமது நிருபா்
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக ஊடகத் தளங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடா்பான ஆபாசப் படங்கள் மற்றும் காணொலிகள் பரப்பப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்எச்ஆா்சி) உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக, கடந்த அக். 8-ஆம் தேதி தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் 67 மற்றும் 67பி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடகத் தளங்கள் வாயிலாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடா்பான சந்தேகத்துக்குரிய படங்கள் மற்றும் காணொலிகள் பரப்பப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புகாரில் சுமாா் 10 இணையதள இணைப்புகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, அந்த இணைப்புகளில் இடம்பெற்றுள்ள தகவல்களின் தன்மை மற்றும் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து காவல் துறையினா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் பிரியங்க் கனூங்கோ, எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்களது உத்தரவின் அடிப்படையில், மெட்டா இந்தியா நிறுவனத்தின் சமூக ஊடகத் தளங்களில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துன்புறுத்தல் தொடா்பான உள்ளடக்கங்கள் கிடைப்பது குறித்து தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது‘ என்று தெரிவித்துள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

