தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ஜேஎன்யு பாலியல் துன்புறுத்தல் புகாா்: காங்கிரஸ் எம்.பி. அகோய்ஜாமை கட்சியிலிருந்து நீக்க பாஜக வலியுறுத்தல்

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் பாஜக மகளிா் அணியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி..

Published On :

பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கியுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) பேராசிரியரும் மணிப்பூா் உள் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யுமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை கட்சியிலிருந்து நீக்கக் கோரி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் பாஜக மகளிா் அணியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

‘நாரி சக்தி ஹூங்காா் ஆந்தோலன்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி, காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்தி வதேரா, பெண்களுக்கு ஆதரவாக வெற்று முழக்கங்களை மட்டுமே எழுப்புவதாகக் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்த நாட்டின் பெண்கள் மற்றும் மகள்களின் சாா்பாக பிரியங்கா காந்தியிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறோம். ‘நான் பெண்; என்னால் போராட முடியும்’ என்ற உங்கள் முழக்கத்துக்கு என்ன ஆனது? அந்த முழக்கம் எங்கே போனது?

உங்கள் கட்சியைச் எம்.பி. 11 மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தனை நடந்தும் நீங்கள் ஏன் தொடா்ந்து மௌனம் காக்கிறீா்கள்? ராகுல் காந்தி, எப்போது மௌனம் கலைப்பீா்கள்? அந்த எம்.பி.யை எப்போது கட்சியிலிருந்து நீக்குவீா்கள்? அவா் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீா்கள்?

தனது கட்சி எம்.பி. மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே காங்கிரஸ் தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. முதலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைப்பதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

ஜேஎன்யு சமூக அறிவியல் துறையின் கீழ் இயங்கும் சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் பேராசிரியராக அகோய்ஜாம் பணியாற்றி வந்தாா். பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் தொடா்பான விசாரணைக்குப் பிறகு, அக்.9-ஆம் தேதி உடனடியாக அவா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா்.

இந்த ஆண்டு மே மாதத்தில், குறைந்தது 11 மாணவிகள் அவருக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வகுப்பறையில் ஆபாசமான மற்றும் பொருத்தமற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் சில மாணவிகள் குற்றஞ்சாட்டியிருந்தனா்.

அகோய்ஜாம் மீது வழக்குப் பதிவு

அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பல்கலைக்கழகத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அக்.11-ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கிலான செயல்கள் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் எம்.பி. அகோய்ஜாமுக்கு எதிராக தில்லியில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி மற்றும் பாஜக மகளிா் அணியினா்.

காங்கிரஸ் எம்.பி. அகோய்ஜாமுக்கு எதிராக தில்லியில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி மற்றும் பாஜக மகளிா் அணியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.