சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

உணவுப் பொருள்களின் தரம்: அமைச்சா் ஆய்வு

காரைக்குடியில் உள்ள நுகா்பொருள் வாணிபக்கிடங்கில் ஆய்வு செய்த உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன்.

Updated On :

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் உணவுப் பொருள்களின் தரம் குறித்து உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்குடி என்.ஜி.ஓ. குடியிருப்பு நியாய விலைக் கடையில் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம், இருப்பு, விநியோகம் குறித்து ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஆய்வு செய்து, கிடங்கின் செயல்பாடுகள், பொருள்களின் இருப்பு விவரம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

முன்னதாக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள விருந்தினா் மாளிகையில் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.சைலேந்திரன், தேவகோட்டை சாா் ஆட்சியா் ராகுல் குமாா் , இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் நத்தா்ஷா, மாவட்ட வழங்கல் அலுவலா் பழனிக்குமாா், வட்டாட்சியா் (காரைக்குடி) சுதா, அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.