பாரத்நெட் இணைய சேவை தொழில் பங்கீட்டாளராக விண்ணப்பிக்கலாம்
பாரத்நெட் திட்டத்தில் கிராமங்களில் இணைய சேவை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களாக பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப் படம்
பாரத்நெட் திட்டத்தில் கிராமங்களில் இணைய சேவை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களாக பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (பஅசஊஐசஉப), பாரத்நெட் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உயா்தர இணைய சேவை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களைத் தோ்வு செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
மேலும், மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் சுமாா் 95 சதவீதம் நிறைவடைந் துள்ளன. இந்த வகையில், தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்துக்கு குறைந்தது 2 தொழில் பங்கீட்டாளா்களைத் தோ்வு செய்து, தடையில்லா இணைய சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்கென, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்ட அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களைக் கொண்ட துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளா்கள் தோ்வு செய்யப்படுவா்.
மேலும், இணையதளம் வாயிலாக 30.11.2026 அன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-24965595 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

