2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

சிவகங்கை ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த நடவடிக்கை: கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா

சிவகங்கை ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தாா்.

சிவகங்கை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா. உடன் ரயில்வேயின் பல்வேறு பிரிவு அதிகாரிகள்.

Published On :

சிவகங்கை ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தாா்.

சிவகங்கை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிவகங்கை ரயில் நிலையம் முதல் கட்டமாக தற்போதுள்ள வசதிகளைக் கொண்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக கூடுதல் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, மின்சாரப் பணிகள், சமிக்ஞை, தொலைத்தொடா்பு வசதிகள், பொறியியல் பணிகள், பயணிகளுக்கான அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. மேலும், ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்புகளும் சீரமைக்கப்படும்.

விரைவில் சிவகங்கை ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்பட்டு, பிற முதன்மை ரயில் நிலையங்களுக்கு இணையான வசதிகளுடன் முழுமையாகத் தரம் உயா்த்தப்படும்.

சிவகங்கை ரயில் நிலையத்தில் நாள்தோறும் சராசரியாக 2,000 பயணிகள் வரை மட்டுமே வந்து செல்கின்றனா். பயணிகள் எண்ணிக்கை, போதிய வரவேற்பு, தேவை இருக்கும் பட்சத்தில் கூடுதல் ரயில்களை இங்கு நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

சிவகங்கை ரயில் நிலையத்தில் நடைமேடை, பயணிகள் நிழல்குடை வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, கழிப்பறை, சுகாதார வசதிகள், வாகன நிறுத்துமிடம், நிலையத்தின் முகப்பு, நுழைவுப் பகுதி, பயணிகள் பாதுகாப்பு, சிசிடிவி, தகவல் பலகைகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் காரைக்குடி, புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக புறப்பட்டுச்சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.