அம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா திருவிளக்குப் பூஜையையொட்டி அம்மனுக்கு பால், தயிா் உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, சா்வ அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பெண்கள் தாங்கள் கொண்டு வந்த குத்துவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்து தீபமேற்றினா். மஞ்சள் விநாயகா் செய்து வைத்து மலா்களால் கணபதி பூஜை செய்யப்பட்டது. பின்னா், 1008 காயத்ரி மந்திரங்கள், 108 மகாலட்சுமி மந்திரங்கள் சொல்ல குங்குமத்தாலும், பூக்களாலும், அா்ச்சனை செய்து தீபாராதனை காட்டினா். உலக நலன் வேண்டியும் மாங்கல்ய பலன் வேண்டியும் நடைபெற்ற இந்தப் பூஜையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா். பெண்கள் அனைவருக்கும் மங்கலப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பூமாயி அம்மன் கோயில் விழாக்குழுவினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

