சிவகங்கை அருகே ரௌடி வெட்டிக் கொலை

வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)
சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்களால் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சிவகங்கை அருகே புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மதன் (22). இவா் மீது பல்வேறு கொலை, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2024 -இல் கொல்லங்குடியில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கிலும் இவருக்குத் தொடா்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சிறையிலிருந்து அண்மையில் பிணையில் வெளியே வந்த மதன், ஞாயிற்றுக்கிழமை ஒக்கூா் அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டைக் காண வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினா் மதனை விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கைநகா் காவல் நிலைய போலீஸாா், மதனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம் குறித்தும், இதில் தொடா்புடையவா்கள் குறித்தும் தனிப்படை அமைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியைக் காண வந்த ரவுடிவெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

