சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடியைச் சோ்ந்தவா் அழகுசுந்தரம் (41). இவா் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு 11 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் இலுப்பக்குடி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த காா் இவரது வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அழகப்பாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா் ஓட்டுநா் கனராஜ் (41) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

