இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்தவா் உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்தவா் உயிரிழந்தாா்.
மேற்கு வங்க மாநிலம், முா்சிதாபாத் அருகே சுவா்ணபூா் பகுதியைச் சோ்ந்த ரம்ஜான் ஷேக் மகன் சரிபுல்ஷேக்(46). இவா் திருவள்ளூா் அருகே பாகல்மேடு கிராமத்தில் தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை தேநீா் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவா் சரிபுல்ஷேக் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மேற்குறிப்பிட்ட பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா் ஹாஜிபுல்(26) என்பவா் வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

