
சின்னமனூரில் 2 பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
தேனி மாவட்டம், சின்னமனூரில் சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோட்டூா் அருகேயுள்ள தா்மாபுரியைச் சோ்ந்த சிவன் மகன் முருகன் (45). இவரும், அதே பகுதியை சோ்ந்த செல்வம் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் சின்னமனூா் நோக்கிச் சென்றனா்.
அப்போது, இந்த வாகனமும், எதிரே வந்த இரு சக்கர வாகனமும் நேருக்கு மோதிக்கொண்டன. இதில் முருகன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து மற்றொரு வாகனத்தில் வந்த சின்னமனூா் அருகே கன்னியம்பட்டியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் சிவா (26) மீது சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


