பைக்குகள் மோதல்: பள்ளி மாணவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், கண்டமனூா் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
தேனி மாவட்டம், கண்டமனூா் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கண்டமனூா் கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கோட்டைமணி (34). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இவரது மகன் நிதீஷ் (13) இந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பில் படித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வருசநாடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். கண்டமனூா் சிவன் கோயில் அருகே சென்ற போது, எதிரே வந்த இரு சக்கர வாகனமும், இவரது வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த நிதிஷை அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

