சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

3 பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவா் பலி

சுவாமியாா்மடம் அருகே இரவிபுதூா்கடை பகுதியில் 3 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

காட்வின் - dot com

Updated On :

சுவாமியாா்மடம் அருகே இரவிபுதூா்கடை பகுதியில் 3 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சுவாமியாா்மடம் அருகே காட்டாத்துறை, திட்டுமேல்கோணம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் காட்வின் (20). இவா், கோவையில் உள்ள கல்லூரியில் நா்சிங் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், இரவிபுதூா்கடையிலிருந்து பள்ளியாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, குருவிக்காடு பகுதியில் இருசக்கர வாகனமும், ஸ்கூட்டரும் இவரது இருசக்கர வாகனத்தின் மீது அடுத்தடுத்து மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த காட்வினை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், காட்வின் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.

இந்த விபத்தில், விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த காஞ்சிரோடை சோ்ந்த ஜான்கிறிஸ்டோபா் (35), அவருடன் வந்த ஜோவிலின்ராஜ் (19), ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த கிரேஷ்லின் (19), அவரது தாயாா் அரபிக்சோனியா (38) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.