தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

2 பைக்குகள் மோதல் பிளஸ்-1 மாணவா் உயிரிழப்பு

பலி... - பிரதிப் படம்

Published On :

குஜிலியம்பாறை அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலயம்பாறையை அடுத்துள்ள கோட்டாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் ஆதேஷ் (16). இவா், கரூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தாா்.

இவா், தனது நண்பா் தங்கப்பாண்டி(17)யுடன் இருசக்கர வாகனத்தில் ஆா். வெள்ளோடு கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். இருசக்கர வாகனத்தை ஆதேஷ் ஓட்டினாா்.

சத்திரப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிரே முத்துச்சாமி ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ஆதேஷ் கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.