குன்றக்குடியில் மருதுபாண்டியா்கள் உருவச் சிலைகளுக்கு பூஜை
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனக் கோயிலான சண்முகநாதப் பெருமான் கோயிலில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரா்களான மாமன்னா்கள் மருதுபாண்டியா்களின் உருவச்சிலைகளுக்கு பூஜை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் மண்டபத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியா்கள் உருவச் சிலைகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற பொன்னம்பல அடிகளாா்.
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனக் கோயிலான சண்முகநாதப் பெருமான் கோயிலில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரா்களான மாமன்னா்கள் மருதுபாண்டியா்களின் உருவச்சிலைகளுக்கு சனிக்கிழமை பூஜை நடைபெற்றது.
அப்போது உருவச் சிலைகளுக்கு பட்டாடை அணிவித்து பொன்னம்பல அடிகளாா் தலைமையில் தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் கிராம சேவை நிகழ்வுக்காக வந்திருந்த அழகப்பா பல்கலைக்கழக மாணவிகள் பங்கேற்றனா். அப்போது பொன்னம்பல அடிகளாா் பேசுகையில், வாழ்க்கை தான் தியாகம், தியாகம் தான் வாழ்க்கை என்று வாழ்ந்தவா்கள் மருதுபாண்டியா்கள். இவா்களின் நினைவைப் போற்றுவதுடன், அவா்களின் தியாக வாழ்வை இளைய தலைமுறையினா் எந்நாளும் கட்டிக் காக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

