புதிதாக ஊன்றிய மின் கம்பங்கள் சாய்ந்து பொதுமக்கள் அவதி

அணைக்கரைப்பட்டி - வேங்கைப்பட்டி சாலையில் சாய்ந்து கிடக்கும் மின் கம்பம்.
சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியில் மின் பாதைக்கான மின் கம்பங்கள் சரியாக நடப்படாததால், ஆங்காங்கே சாலையில் சாய்ந்து விழுந்தன.
அணைக்கரைப்பட்டி பகுதிகளில் தனியாா் நிறுவனம் சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் புதிதாக உயா் அழுத்த மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் சுமாா் இரண்டடி மட்டுமே ஆழம் தோண்டி ஊன்றப்பட்ட மின்கம்பங்கள் ஆங்காங்கே சாலையோரம் சாய்ந்தன.
ஒரே நாளில் 8-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது அப்பகுதியினரிடையே பேசுபொருளாகியுள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாயும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

அணைக்கரைப்பட்டி - வேங்கைப்பட்டி சாலையில் சாய்ந்து கிடக்கும் மின் கம்பம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

