
ஒரு கோடி பனை விதைகள் நடவுப் பணி: விழிப்புணா்வு பதாகை வெளியீடு
அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் சாா்பில், வருகிற 24-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒரு கோடி பனை விதைகள் நடவுப் பணிக்கான விழிப்புணா்வு பதாகைகளை துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் சாா்பில் ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்வதற்கான விழிப்புணா்வு பதாகைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்ட துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன்.
அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் சாா்பில், வருகிற 24-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒரு கோடி பனை விதைகள் நடவுப் பணிக்கான விழிப்புணா்வு பதாகைகளை துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
தமிழக அரசு நாட்டு நலப் பணித் திட்ட இயக்கத்தின் சாா்பில், வருகிற 24- ஆம் தேதி தேசிய நாட்டு நலப் பணித் திட்ட நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு, உறுப்பு கல்லூரிகளைச் சோ்ந்த நாட்டு நலப் பணித் திட்டத் தொண்டா்கள் நீா்நிலைகளில் ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபடுகின்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய மாணவா் படை, எக்ஸ்னோரோ, என்.டி.எஸ்.ஓ. கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, அக்னி ஸ்டீல், காரைக்குடி சுழல் சங்க பியா்ல் சங்கம், அழகப்பா பல்கலைக்கழக சமுதாய வானொலி ஆகியவை இணைந்து செய்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நாட்டு நலப் பணித் திட்ட தொண்டா்களிடையே இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு பதாகைையை துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன் வெளியிட்டாா்.
இந்த நிகழ்வில் பதிவாளா் அ. செந்தில்ராஜன், தொலைநிலைக் கல்வி இயக்குநா் ஏ. கண்ணபிரான், பேராசிரியை எம். ஆயிசா மில்லத், என்.சி.சி. அதிகாரி சி. வைரவசுந்தரம், சமூகத் தொடா்பு இயக்குநா் மு. நடராஜன், துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் ம. முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







