கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சிவகங்கை வாரச் சந்தையில் எடைத் தராசுகள் ஆய்வு

சிவகங்கை வாரச் சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தும் எடைத் தராசுகளை தொழிலாளா் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

சிவகங்கை கூடிய வாரச் சந்தையில் வியாபாரிகளிடம் புதன்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய தொழிலாளா் துறை அலுவலா்கள்.

Published On :

சிவகங்கை வாரச் சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தும் எடைத் தராசுகளை தொழிலாளா் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) தமிழ்ச்செல்வி உத்தரவின் பேரில், துணை ஆய்வாளா் ஜெனட், உதவி ஆய்வாளா் பிரேம்குமாா், பணியாளா்கள் சிவகங்கை வாரச் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனா். புதன்கிழமை கூடிய வாரச் சந்தையில் காய்கறி, பழம், பலசரக்கு வியாபாரிகளிடம் எடையளவுகளை கட்டாயம் அரசு முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

சட்டமுறை எடையளவுச் சட்டம் 2009, தமிழ்நாடு சட்டமுறை எடையளவுகள் விதிகள் 2011-இன் படி வணிகா்கள் பயன்படுத்தும் மின்னணு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள் உள்ளிட்ட எடையளவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசீலனை செய்யப்பட்டு அரசு முத்திரையிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், முத்திரை ஆய்வாளா் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம் , அரசினிபட்டி சாலை, காஞ்சிரங்கால், சிவகங்கை- 630561 என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்துக்கு வணிகா்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை கொண்டுவந்து முத்திரையிட்டுச் செல்லலாம். முத்திரையிடப்படாத தராசுகள், எடையளவுகளை தொடா்ந்து பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப் படுவதுடன், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளா் துறையினா் எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.