முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சின்னமனூரில் ஏப். 7-இல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சின்னமனூர், வ.உ.சி. தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏப்.7-ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:41 am IST

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சின்னமனூர், வ.உ.சி. தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏப்.7-ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் ஏப். 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் நெசவாலை, ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம், மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் சின்னமனூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள், தொழிற்பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு மற்றும் பொறியியல் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள வருவோர் தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் 2 மார்பளவு புகைப்படங்களை கொண்டு வர வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணிக்கு தேர்வு செய்யப்படுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.