திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைகிறது: லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தியும் சரிவு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:13 am

DIN

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.  இதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தியும் சரிவடையத் தொடங்கியுள்ளது.
 இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 கன அடியிலிருந்து 250 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தியும், குறைந்துள்ளது. இந்த அணையில் ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம்  114.20 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர் வரத்து 76  கன அடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 250 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் லோயர்கேம்ப்பில் உள்ள 4 மின்னாக்கிகளில்,  2 மின்னாக்கிகள் செயல்பட்டு 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை முதல் அணையிலிருந்து 250 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுவதால் தற்போது ஒரு மின்னாக்கியே செயல்பட்டு, 28 மெகாவாட் மின்சாரமே உற்பத்தியாகிறது. அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.