ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சின்னமனூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 40  பெண் கூலித் தொழிலாளர்கள் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், 40  பெண் கூலி தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:18 am

DIN

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், 40  பெண் கூலி தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
கோட்டூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் விக்னேஷ் (20). இவர், சின்னமனூர் அருகேயுள்ள வேப்பம்பட்டியிலிருந்து சீலையம்பட்டியிலுள்ள தனியார் தோட்ட வேலைக்காக 40 பெண்களை சரக்கு வாகனத்தில்  ஏற்றிச் சென்றுள்ளார். 
அப்போது, சீலையம்பட்டி செங்குளம் வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் சாலையிலேயே கவிழ்ந்தது. 
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னமனூர் போலீஸார், விபத்தில் பலத்த காயடைந்த  ராணி (35), விஜயா, லோகமணி, செல்வி, மயில் உள்பட 10 பெண்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், லேசான காயமடைந்த 35 பேரை சின்னமனூர் அரசு மருத்துமவனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.