பெரியகுளம் ராஜேந்திர சோழிஸ்வரர் திருக்கோயிலில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்குனி தேரோட்டத்தை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
ராஜேந்திர சோழிஸ்வரர் பங்குனி தேரோட்ட திருவிழா மார்ச் 21 ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நாள்தோறும் சுவாமி பல்வேறு
வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. உற்சவர் சோமாஸ்கந்தர் தேரில் ஏழுந்தருளினார்.
மாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தார். அதன் பின் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
தேர் திருவள்ளுவர் சிலை, தெற்கு ரத வீதி வழியாக நிலையை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் கைலாசநாதர் கோயில் ஆலோசனைக்குழு உறுப்பினர் வி.ப.ஜெயபிரதீப் மற்றும் திருப்பணிக்குழு தலைவர் எல்.சசிதரன்,
திருப்பணிக்குழு உறுப்பினர் பி.சி.சிதம்பர சூரியவேலு மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி.யில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்!

ஆடியோ வெளியானபிறகு ஆ. ராசா வெளியே வரவில்லை! அண்ணாமலை | BJP | DMK

பலரது வியர்வைக்குத் துரோகம் செய்யாதீர்கள்..! ஜன நாயகன் குறித்து ஜீவா!

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

