தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதார துணை இயக்குநர் மீது புகார் தெரிவித்து, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஆப்டோமெட்ரி ப்ரபசனல்ஸ் அசோசியேஷன் (டி.என்.ஜி.ஓ.பி.ஏ.) மாநிலத் தலைவர் கே. கார்த்திகேயன் தலைமை வகித்தார். பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பி. கருப்பையா, மருந்தாளுநர் சங்க மாவட்டத் தலைவர் பி. ஆனந்தபாஸ்கர், கிராம சுகாதார செவிலியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. ரமணி, ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிதிக் காப்பாளர் பொ. அன்பழகன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஞான. திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொது சுகாதாரத் துணை இயக்குநர் பணியாளர் விரோதப் போக்கிலும், பல்வேறு புகார்களுக்கு இடமளிக்கும் வகையிலும் செயல்பட்டு வருதாகப் புகார் தெரிவித்தும், இந்தப் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசை வலியுறுத்தியும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.