ஆண்டிபட்டி சட்டபேரவைக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் திமுக சார்பில் ஆ.மகாராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் கோபால் தலைமையில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் 200 -க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையம் முதல் திமுக அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
அங்கு, திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜராம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செஞ்சுரி செல்வம், நெசவாளர் அணி அமைப்பாளர் ஆ.ராமசாமி, பேரூர் செயலாளர் திருமலை ஆகியோர் முன்னிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பி.ரவீந்திரன், பாண்டித்துரை, ஞானம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.