முத்தரையர் இன மக்களுக்கு சீர்மரபினர் சான்று வழங்க கோரிக்கை
By DIN | Published On : 12th February 2019 07:10 AM | Last Updated : 12th February 2019 07:10 AM | அ+அ அ- |

முத்தரையர் சமுதாய மக்களுக்கு சீர்மரபினர் என ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்க ஆலோசனைக் கூட்டம், மாவட்ட சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பிச்சை மணி தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் முருகன், மாவட்டப் பொருளாளர் ராஜா, கொள்கை பரப்புச் செயலர் குமரன், மாவட்ட துணைத் தலைவர் மதுரைவீரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கடமலை - மயிலை ஒன்றியத்தில் வசிக்கும் மக்களை வனத் துறையினர் வெளியேற்றுவதைக் கண்டித்தும், முத்தரையர் மக்களின் உரிமைக்காக உரிமை மீட்பு மாநாடு நடத்துவது என்றும், தேனி மாவட்டத்தில் முத்தரையர் சமுதாய மக்களுக்கு குளறுபடி இல்லாமல் ஒரே மாதிரியாக சீர்மரபினர் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாவட்டச் செயலர் தன்னாசி வரவேற்றார். முடிவில், ஒன்றியத் தலைவர் மனோகரன் நன்றி கூறினார்.