அய்யம்பட்டியில் பிப்.10 இல் ஜல்லிக்கட்டு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 04th January 2019 01:11 AM | Last Updated : 04th January 2019 01:11 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் வரும் பிப்.10 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி கிராமக் கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அய்யம்பட்டியில் ஏழைகாத்தம்மன் வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு தை மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இந்த ஆண்டு பிப்.10 ஆம் தேதி (தை 27) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று அய்யம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜன் தலைமையில் கிராமக் கமிட்டியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.