ஆண்டிபட்டியில் கடையில் செல்லிடப்பேசி திருடிய இளைஞர் போலீஸில் ஒப்படைப்பு
By DIN | Published On : 04th January 2019 01:12 AM | Last Updated : 04th January 2019 01:12 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை செல்லிடப்பேசிக் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து செல்லிடப்பேசியை திருடிச் சென்ற இளைஞரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசு மருத்துவமனையின் பின்புறம் ஆறுமுகம் என்பவர் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளார். வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இவரது கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் செல்லிடப்பேசி வாங்குவது போல் நடித்து யாரும் எதிர்பார்க்காத வேளையில் ரூ. 8000 மதிப்புள்ள செல்லிடப்பேசியை எடுத்துக் கொண்டு ஆண்டிபட்டி- தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஓடினார். இதையடுத்து கடைக்காரர் கூச்சலிடவே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஆண்டிபட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ஹரீஸ் என்பது தெரியவந்தது.