ஆண்டிபட்டியில் விசைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 01:12 AM | Last Updated : 04th January 2019 01:12 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை விசைத் தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி, சக்கம்பட்டியில் அனைத்து விசைத் தறி நெசவாளர் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக் குழு தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். எல்.பி.எப்., தலைவர் பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. தலைவர் அழகர்சாமி, சி.ஐ.டி.யு. தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆண்டிபட்டி சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் உள்ள விசைத் தறி நெசவாளர்களுக்கு 50 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும், 20 சதவிகிதம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.