தேனி மாவட்டத்தில் 1,088 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th January 2019 01:13 AM | Last Updated : 04th January 2019 01:13 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் நெகழி ஒழிப்பு கண்காணிப்புக் குழு மூலம் 1,088 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வியாழக்கிழமை கூறியது: தமிழகத்தில் கடந்த ஜன.1ஆம் தேதி முதல் நெகிழி பொருள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நெகிழி ஒழிப்பு கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ஜன.1ஆம் தேதி முதல் தற்போது வரை 1,088 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவற்றை வைத்திருந்தோருக்கு மொத்தம் ரூ.61 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.