கொடைக்கானலில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 07th January 2019 07:08 AM | Last Updated : 07th January 2019 07:08 AM | அ+அ அ- |

கேரள முதல்வரைக் கண்டித்து, கொடைக்கானலில் இந்து அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.
கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை கண்டித்து, கொடைக்கானல் பகுதிகளிலுள்ள இந்து அமைப்பினர் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், கேரளா முதல்வருக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இதில், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.