கம்பம் கிழக்கு, மேற்கு வனச்சரகர்கள் நியமனம்
By DIN | Published On : 09th June 2019 02:49 AM | Last Updated : 09th June 2019 02:49 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பம் கிழக்கு மற்றும் மேற்கு வனச்சரகங்களுக்கு புதிதாக வனச்சரகர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கிழக்கு வனச்சரகர் சனிக்கிழமை பொறுப்பேற்றார்.
தேனி மாவட்டம் மேகமலை வன உயிரினச்சரணாலய பகுதியில் கம்பம் கிழக்கு வனச்சரகம் உள்ளது. இதில், வனச்சரகராக இருந்த தினேஷ் உத்தமபாளையம் வனச்சரகத்திற்கு மாற்றப்பட்டார்.
உத்தமபாளையத்தில் பணியாற்றிய வனச்சரகர் ஜீவனா கம்பம் கிழக்கு வனச்சரகராக மாற்றப்பட்டு, சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய வனச்சரகரை வனவர், காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை மற்றும் தீ தடுப்பு காவலர்கள் வரவேற்றனர்.
கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு பல மாதங்களாக வனச்சரகர் நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது வனச்சரகராக பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் போடி வனச்சரகத்தில் பணியாற்றி, கம்பம் மேற்கு சரகத்திற்கு பொறுப்பு சரகராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.