ஆண்டிபட்டியில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு
By DIN | Published On : 06th March 2019 07:26 AM | Last Updated : 06th March 2019 07:26 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகர் கொண்டமநாயக்கன்பட்டியில் திங்கள்கிழமை அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த தேனி கம்போஸ்ட் ஓடைத் தெருவைச் சேர்ந்த சென்றாயன் (42), அவரது மனைவி சுதா (35), மகன் லோகமணி (10), மகள் அபிநயா (7) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சுதாவின் தாயார் பொன்னுத்தாய் (60) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ராமு ஆகியோர் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், பொன்னுத்தாய் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து, ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.