கேரளத்துக்கு மாட்டு வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது
By DIN | Published On : 28th March 2019 08:26 AM | Last Updated : 28th March 2019 08:26 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 1000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
உத்தமபாளையம் வட்டாரம் கூடலூரில் இருந்து குமுளி மலைப்பாதை வழியாக மாட்டு வண்டிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் அறிவுறுத்தலின்படி, உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் குமுளி மலைப்பாதையில் சோதனையிட்டனர்.
அப்போது, அவ்வழியாக சென்ற இரு மாட்டுவண்டிகளை சோதனை செய்ததில் 1,038 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு 21 சிறிய மூட்டைகளில் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகேசன், கடத்தலில் ஈடுபட்ட கூடலூரை சேர்ந்த ராஜாங்கம் மற்றும் அஜித்குமாரை ஆகியோரை கைது செய்தனர். மேலும், 2 மாட்டு வண்டிகள் மற்றும் 4 மாடுகளை பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...