பெரியகுளம் (தனி) சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக உள்பட 14 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இத் தொகுதியில் அதிமுக சார்பில் மு.மயில்வேல், திமுக சார்பில் கே.எஸ்.சரவணக்குமார், அமமுக சார்பில் கதிர்காமு, மக்கள் நீதி மையத்தின் சார்பில் பிரபு உள்பட 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்று வேட்பாளர் வேல்முருகன், திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்று வேட்பாளர் சரிதா மற்றும் அன்னகாமு (சுயேச்சை) ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மையம் உள்பட 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.