தென்கரை பேரூராட்சியில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
By DIN | Published On : 15th May 2019 06:54 AM | Last Updated : 15th May 2019 06:54 AM | அ+அ அ- |

தென்கரையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு தினமணி செய்தி எதிரொலியை அடுத்து செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.
தென்கரை பேரூராட்சிக்கு பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து குடிநீர் எடுத்து வரப்பட்டு சத்யா நகரில் சுத்திகரிக்கப்பட்டு குழாய் வழியாக தென்கரை பேரூராட்சி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு தண்ணீர் எடுத்து வரப்படும் குடிநீர் குழாய் பெரியகுளம் கூட்டுறவு பால்பண்ணை எதிரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடைந்து தண்ணீர் வீணாகி வந்தது. இதனால் தென்கரை பேரூராட்சி மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தினமணியில் செய்தி வெளியானது. இதனையடுத்து குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் ஆய்வு செய்து, குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்தனர்.