தேனி மாவட்டத்தில் 2 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
By DIN | Published On : 19th May 2019 03:39 AM | Last Updated : 19th May 2019 03:39 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வடுகபட்டி, ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பாலசமுத்திரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.
வடுகபட்டி, சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் 702 ஆண்கள், 703 பெண்கள் உள்பட மொத்தம் 1,405 பேர் வாக்களிக்கின்றனர். பாலசமுத்திரம், கம்மவார் சரஸ்வதி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் உள்பட மொத்தம் 1,255 பேர் வாக்களிக்கின்றனர்.
இரு வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மறு வாக்குப் பதிவு நடைபெறும் இரு வாக்குச் சாவடிகளில் தலா 6 பேர் வீதம் மொத்தம் வருவாய்த் துறை அலுவலர்கள் 12 பேர் வாக்குப் பதிவு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாலசமுத்திரம் வாக்குச் சாவடி பகுதியில் 121 போலீஸாரும், வடுகபட்டி வாக்குச் சாவடி பகுதியில் 178 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் 25 துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.