அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி: டிஎல்ஓ, ஏஓஸி , பாங்க் ஆப் பரோடா அணிகள் வெற்றி
By DIN | Published On : 19th May 2019 03:39 AM | Last Updated : 19th May 2019 03:39 AM | அ+அ அ- |

பெரியகுளத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்தாட்டப்போட்டியில் டிஎல்ஓ, ஏஓஸி , பாங்க் ஆப் பரோடா அணிகள் வெற்றி பெற்றன.
பெரியகுளம் , சில்வர்ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்டப்போட்டி மே 15 ஆம் தேதி முதல் மே 21 வரை நடைபெறுகிறது.
"நாக் அவுட்' முறையில் நடைபெற்று வரும் போட்டியில் நான்காம் நாளான சனிக்கிழமை வாரணாசி டிஎல்ஓ அணி, கேரள மாநில மின்வாரிய அணியை 62க்கு 57 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
அதேபோல் செகந்திராபாத் ஏ.ஓ.ஸி அணி, சென்னை ஐசிஎப் அணியை 76க்கு 60 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி, லோனாவானா இந்திய கடற்படை அணியை 105க்கு 100 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
மே 19 ஆம் தேதி முதல் லீக் சுற்றுகள் தொடங்குகிறது. மே 21 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.