தேனி மாவட்டத்தில் மழைக்கு 6 வீடுகள் இடிந்து சேதம்
By DIN | Published On : 01st November 2019 08:40 AM | Last Updated : 01st November 2019 08:40 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், 6 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
இது குறித்து மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் கடந்த அக். 29 ஆம் தேதி முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. தொடா் மழையால் பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மொத்தம் 3 வீடுகளின் சுவா் இடிந்து விழுந்துள்ளன. போடியில் 2 வீடுகள் பகுதி அளவிலும், ஒரு வீடு முழுமையாகவும் இடிந்து விழுந்துள்ளது.
மாவட்டத்தில் மழையால் 10 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து, தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது என்றனா்.