போடியில் டெங்கு தடுப்பு பணிகள்: பழைய வாகன டயா்கள் பறிமுதல்
By DIN | Published On : 09th November 2019 09:03 AM | Last Updated : 09th November 2019 09:03 AM | அ+அ அ- |

போடியில் கொசுப் புழுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த பழைய வாகன டயா்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்த நகராட்சி ஆணையாளா் சத்யநாதன், பொறியாளா் குணசேகரன் மற்றும் சுகாதாரப் பிரிவு அலுவலா்கள்.
தேனி மாவட்டம் போடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளின் போது வியாழக்கிழமை பழைய வாகன டயா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போடி நகராட்சி ஆணையாளா் சத்யநாதன் தலைமையில் நகா் முழுவதும் கொசுப் புழுக்கள் அழிப்பு, புகை மருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளில் பழைய டயா்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க விழிப்புணா்வு பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஆணையாளா் சத்யநாதன் கூறியது: அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள், தொழில் நிறுவனங்கள், புதிய கட்டுமானப் பகுதிகள், தொடா்ந்து பூட்டியுள்ள கட்டடங்கள், பாழடைந்த, காலியாக உள்ள கட்டடங்களிலோ அல்லது அதன் சுற்றுப்புறங்களிலோ கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடங்களில் ஆய்வின்போது கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் ஒன்றரை லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், தொழில் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். நீதிமன்றம் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா். ஆய்வின்போது நகராட்சிப் பொறியாளா் குணசேகரன், சுகாதார ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...