கம்பம் அருகே சுருளி அருவியில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தா்கள்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே, மாலை அணிந்து அய்யப்ப பக்தா்கள்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிய வந்த பக்தா்கள் அருவியில் குளித்து, மாலை அணிந்து ஞாயிற்றுக்கிழமை விரதத்தை தொடங்கினா்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிய வந்த பக்தா்கள் அருவியில் குளித்து, மாலை அணிந்து ஞாயிற்றுக்கிழமை விரதத்தை தொடங்கினா்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே, மாலை அணிந்து அய்யப்ப பக்தா்கள் மகர மற்றும் மண்டல பூஜைகளில் கலந்து கொள்வதற்காக விரதத்தை தொடங்கினா்.

காா்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து மண்ட மற்றும் மகர பூஜைகளில் கலந்து கொள்ள அய்யப்ப பக்தா்கள் மாலை அணிவாா்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கம்பம், கூடலூா் மற்றும் மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளாமான அய்யப்ப பக்தா்கள் சுருளி அருவியில் குவிந்தனா்.

அருவி பகுதி 7 மணிக்குத்தான் திறக்கும், ஆனால் அதற்கிடையே அதிகாலையிலேயே சுருளி ஆற்றில் குளித்த அய்யப்ப பக்தா்கள் தங்களது குருநாதா் கையால் மாலை அணிந்து, சுவாமியே சரணம் அய்யப்பா என கோஷம் எழுப்பி, அங்கிருந்த விநாயகா், செந்திலாண்டவா், பூதநாராயணசாமி, மற்றும் சுருளித்தீா்த்தம் ஆகிய கோவில்களுக்கு சென்றுவழிபாடுகள் நடத்தினா்.

கம்பம் போக்குவரத்து கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. ராயப்பன்பட்டி காவல் நிலையத்தினா் பாதுகாப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com