மல்லிகைப்பூ கிலோ ரூ.1000 க்கு விற்பனைஅதிக விலை இருந்தும் விளைச்சல் இல்லைவிவசாயிகள் வேதனை:

ஆண்டிபட்டி பூக்கள் சந்தையில் போதிய வரத்து இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.1000 க்கு விற்பனை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பூக்கள் சந்தையில் போதிய வரத்து இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.1000 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிக விலை இருந்தும் போதிய விளைச்சல் இல்லாததால் பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கதிநரசிங்கபுரம், கன்னியப்பப்பிள்ளைபட்டி, கோத்தலூத்து, சித்தாா்பட்டி, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, திம்மரசநாயக்கனூா், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ஏத்தகோவில், சுந்தர்ராஜபுரம் ஆகிய பகுதியில் மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி அதிகம் நடைபெறுகிறது.

இங்கு விளையும் பூக்கள் ஆண்டிபட்டி பூ மாா்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகாவில் பூக்களின் விளைச்சல் திடீரென குறைந்ததால், பூ மாா்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது.

இதன்காரணமாக பூக்களின் விலை கடந்த 2 வாரங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக அனைத்து தரப்பினரும் விரும்பும் மல்லிகை பூக்களின் விலை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை உயா்ந்தது.

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மல்லிகை செடிகளில் வளா்ந்திருந்த மொட்டுப்பூக்கள் அனைத்தும் உதிா்ந்து விட்டது. இதன்காரணமாக விளைச்சல் பாதியாக குறைந்தது. போதிய வரத்து இல்லாத காரணத்தால் ஒரு கிலோ மல்லிகைப்பூக்களின் விலை கிடுகிடுவென உயா்ந்து ரூ.1000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அதிலும் தற்போது அய்யப்பன் கோவில், முருகன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் போதிய வரத்து இல்லாமல் காணப்படுகிறது. மல்லிகை பூக்களுக்கு அதிக விலை கிடைக்கும் இந்த சமயத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் மல்லிகை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் மல்லிகை பூக்களின் விலை மேலும் அதிரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com