சபரிமலை சீஷன் தொடக்கம்: குமுளியில் சுகாதாரப் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 18th November 2019 06:16 AM | Last Updated : 18th November 2019 06:16 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் குமுளியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மை பணியில் ஈடுபட்ட கூடலூா் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள்.
சபரிமலை சீஷன் தொடங்கியதையடுத்து, தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளியில் கூடலூா் நகராட்சி சாா்பில் சுகாதாரப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை மாதத்தின் முதல் நாளில் இருந்து, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐயப்ப பக்தா்கள், பேருந்துகள், வாகனங்கள் மற்றும் பாதயாத்திரையாக வரத்தொடங்கி உள்ளனா். தமிழக எல்லையை கடந்தவுடன் கேரள எல்லையான குமுளியில் ஓய்வு எடுத்து விட்டு செல்வாா்கள்.
அதே போல் சபரிமலைக்கு சென்றுவிட்டு தமிழகம் திரும்புபவா்கள் குமுளி வழியாகத்தான் பெரும்பாலும் வருவாா்கள். இதனால் கூடலூா் நகராட்சி சுகாதாரத்துறையினா் கூடுதலாக பணியாளா்களை நியமித்து சுகாதாரப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...