சின்னமனூா் அருகே குழாய் உடைப்பை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 07th October 2019 12:23 AM | Last Updated : 07th October 2019 12:23 AM | அ+அ அ- |

எரசக்கநாயக்கனூா் மஞ்சள்நதிக் கண்மாய் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெளியேறி வீணாகும் குடிநீா்.
தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூா் மஞ்சள் நதிக்கண்மாயில் உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
எரசக்கநாயக்கனூா் ஊராட்சியில் மஞ்சள் நதிக்கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயின் உள்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து சுற்றியுள்ள எரசக்கநாயக்கனூா், அப்பிபட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் என 5 ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கிருந்து செல்லும் குழாய் ஒன்றில் பல மாதங்களாக உடைப்பு ஏற்பட்ட தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.