தேனி அருகே மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது
By DIN | Published On : 09th October 2019 08:36 AM | Last Updated : 09th October 2019 08:36 AM | அ+அ அ- |

தேனி அருகே பூதிப்புரத்தில் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பூதிப்புரத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் மலைச்சாமி (29). இவருக்கும் முத்துத்தேவன்பட்டியைச் சோ்ந்த ரேவதி (19) என்பவருக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மலைச்சாமி தினமும் மது அருந்து விட்டு வீட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்குச் சென்று விட்டாராம்.
இந்த நிலையில் திங்கள்கிழமை குடிபோதையில் வீட்டிற்கு வந்த மலைச்சாமி, மது அருந்துவதற்கு பணம் கேட்டு தனது தந்தை தங்கராஜூடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், மலைச்சாமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளாா். இது குறித்து மலைச்சாமியின் மனைவி ரேவதி அளித்தப் புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கராஜை கைது செய்தனா்.