அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 11th September 2019 07:47 AM | Last Updated : 11th September 2019 07:47 AM | அ+அ அ- |

தேவதானப்பட்டி, கக்கன்ஜி காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பிரேம்குமார் மற்றும் கக்கன்ஜி காலனி பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமியிடம் அளித்த மனு விபரம்: தேவதானப்பட்டி பேரூராட்சி, கக்கன்ஜி காலனியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், குடிநீர், தெருவிளக்கு, சாலை மற்றும் பொது கழிப்பறை வசதி செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.