ஆண்டிபட்டி அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய இளைஞர் கைது
By DIN | Published On : 11th September 2019 07:45 AM | Last Updated : 11th September 2019 07:45 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே நடைபாதை பிரச்னையில் இருதரப்புக்கிடையே இருந்து வந்த முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே காமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கபெருமாள் மனைவி அழகுமணி (48). இவர்களுக்கும் வீட்டின் அருகில் உள்ள பாலு மகன் ரமேஷ் (35) என்பவருக்கும் நடைபாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருதரப்பிற்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை கடைவீதிக்கு சென்ற அழகுமணியிடம் ரமேஷ் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினாராம். இதுகுறித்து வருசாடு காவல் நிலையத்தில் அழகுமணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.