மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 11th September 2019 07:48 AM | Last Updated : 11th September 2019 07:48 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் "ஜல்சக்தி அபியான்' திட்டத்தின் கீழ் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பள்ளி கல்லூரிகள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கம்பம் நகராட்சி மற்றும் முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி இணைந்து விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். பேரணிக்கு நகராட்சி மேலாளர் முனிராஜ் தலைமை வகித்தார். பேரணி உழவர் சந்தை, வேலப்பர் கோவில் தெரு, அரசமரம், பிரதான சாலை, காந்தி சிலை, பத்திரப் பதிவு அலுவலகம் வழியாக சென்று மீண்டும் நகராட்சியில் நிறைவடைந்தது. செப். 29 இல் அனைத்து வீடு மற்றும் நிறுவனங்களில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் இல்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.
இதில் நகரமைப்பு அலுவலர் தங்கராஜ், வருவாய் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.