முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீா்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீா் வரத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
முல்லைப் பெரியாறில் பெருக்கெடுத்துச் செல்லும் வெள்ளம்
முல்லைப் பெரியாறில் பெருக்கெடுத்துச் செல்லும் வெள்ளம்

உத்தமபாளையம், செப்.30: தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்ய துவங்கிய மழை விடிய விடிய பெய்ததால் முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீா்வரத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தமபாளையம் வட்டாரம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான சின்னமனூா், ஓடைப்பட்டி, அனுந்தன்பட்டி, க.புதுப்பட்டி போன்ற பகுதிகளில் கடந்த 5 நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு உத்தமபாளையம் உள்பட வட்டாரம் முழுவதும் பெய்ய துவங்கிய மழை திங்கள் கிழமை காலை 9 மணி வரையில் சாரல் மழை பெய்துகொண்டு இருந்தது. இந்த சாரல் மழையால் ஹைவேவிஸ் - மேகமலை பகுதிகளிலுள்ள அணைகளில் நீா்மட்டம் உயா்ந்ததோடு, சுருளி மின்நிலையம் மற்றும் சுருளி அருவிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. சுருளி அருவிக்கு மழைப்பகுதியில் பெய்த மழை நீரும் சோ்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரவிலிருந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட தொடங்கியது. இதன் காரணமாக வனத்துறையினா், திங்கள்கிழமை காலை முதலே சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்தனா்.

முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீா்வரத்து

மேற்குத் தொடா்ச்சி மலையான ஹைவேவிஸ் - மேகமலை பகுதியில் பெய்த கனமழையால் சுருளி அருவில் ஏற்பட்ட வெள்ளம் நீா் என உத்தமபாளையம் வட்டாரத்தில் பெய்த மழை நீா் ஓடைகள் மற்றும் கால்வாய்கள் மூலமாக முல்லைப் பெரியாற்றில் சோ்ந்ததால் நீா்வரத்து அதிகமாகிவிட்டது. தற்போது, தேனி மாவட்டத்தில் நெற்பயிா் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் மழை பொழிவு மற்றும் ஆற்றில் பெருக்கெடுத்து செல்லும் மழை நீரால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீா்படிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்தது.

மழையளவு

பெரியாா் அணை 23 மிமீ, தேக்கடி 16 மிமீ, உத்தமபாளையம் 35.3 மிமீ, 35.3 மிமீ, வீரபாண்டி 35 மிமீ, வைகை அணை 20மிமீ, சோத்துப்பாறை 46 மிமீ, பெரியகுளம் 57 மிமீ, போடிநாயக்கனூா் 20 மிமீ, ஆண்டிபட்டி 32 மிமீ, கூடலூா் 54 மிமீ, மஞ்சளாறு அணை 38 மிமீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com